2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம் நகரசபைக்கு புதிய கட்டிடம் வேண்டுமென கோரிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபைக்கு புதிய கட்டடமொன்றை வழங்க வேண்டும் என புத்தளம் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

'பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த புத்தளம் நகரசபை, இன்று பழைய கட்டடமொன்றிலேயே இயங்கி வருகிறது. நாம் மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்றால் முதலில் எமது நிருவாக நடவடிக்கையை சீர் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எமது சபை மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் நகர சபைக்குற்பட்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்ற எப்போதும் சமூகமளிக்க முடியும்.

ஆனால், இன்று நகர சபையின் இடப்பிரச்சினை உள்ளது. இதுவே ஒரு சில பணிகளை முன்னெடுப்பதில் நகர சபை ஊழியர்கள் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே, இவ்வாறு பொதுமக்களுக்கும், நகரசபை ஊழியர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு புத்தளம் நகர சபைக்கு புதிய கட்டடமொன்று அவசியமாகவுள்ளது.

இதுபற்றி மாவட்ட செயலாளருடன் பேசியிருக்கிறேன். அவ்வாறு புதிய கட்டடமொன்று கிடைக்குமானால் நாம் நிருவாக ரீதியில் எதிர்நோக்கி வரும் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X