2025 மே 15, வியாழக்கிழமை

நவீ மூன்று வருடங்களுக்கு முன்னாள் இலங்கை வந்திருக்க வேண்டும்: எச்.எம்.சந்திரசேன

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

'தற்போது இலங்கை வந்திருக்கும் நவநீதம்பிள்ளை கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருக்க வேண்டும்.

அவ்வாறு வந்திருந்தால் பாதைகள், புகையிரத பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் என்பனவற்றினை சேதப்படுத்தி புலிகள் அமைப்பு மனித உரிமை மீறலில் ஈடுப்பட்டதினை அவதானித்திருக்கலாம்' என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

கல்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'அவ்வாறு இல்லை எனின் 88, 89ஆம் ஆண்டுகளில் இலங்கை வந்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சியினதும், ஜே.வி.பியினதும் மனித உரிமை மீறல்களினை அவதானித்திருக்கலாம். தற்போது அவரினால் பாதைகள், புகையிரத பாதை, பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் என்பனவற்றில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளினையே பார்வையிடக்கூடியதாக இருக்கும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .