2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குளங்களை ஆழமாக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 600 குளங்களில் சேறு அகற்றி ஆழமாக்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்தினுள் 200 குளங்களின் சேறு அகற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இவ்வேலைத்திட்டத்திற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சேறு அகற்றி ஆழமாக்கும் பணியுடன் குளங்களின் வான் மற்றும் மதகுகளை பழுது பார்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X