2025 மே 14, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

13 வயது பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் மெரவல குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் சிறுமியான மாணவியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி அப்பிரதேச பாடசாலை ஒன்றில்  8 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் காதல் தொடர்பினையும் ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.

இதன் காரணமாக பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வதாக கடந்த 28 ஆம் திகதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ள சிறுமி சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து இருவரும் சிலாபம் சிங்கபுர எனும் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய வீடொன்றிற்கு சென்றுள்ளனர். 

அங்கு வைத்தே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விடயத்தைத் தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் அத்தொடர்பை விட்டுவிடுமாறு சிறுமியை எச்சரித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி கடந்த 31 ஆம் திகதி சந்தேக நபருடன் சென்றுள்ளார். இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டினையடுத்து சிறுமியும் அவரது காதலரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தன் விருப்பத்துடனேயே தனது காதல் தன்னுடன் உறவு கொண்டதாக சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .