2025 ஜூலை 09, புதன்கிழமை

கரைத்தீவில் நடமாடும் சேவை

Super User   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் குறைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்த்து வைக்கும் நடமாடும் சேவை  இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நடமாடும் சேவை வண்ணாத்திவில்லு  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.

வண்ணாத்திவில்லு  பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த டமாடும் சேவையில் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் புத்தளம் அமைப்பாளரும் கர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவதற்கும் இதன போது கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இரத்த பரிசோதனைகளும் செய்து கொடுக்கப்பட்டன. இந்த சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து பயனடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .