2025 மே 15, வியாழக்கிழமை

சிங்கள இனவாதிகளுக்கு இடமில்லை: சோமவன்ஸ தேரர்

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளத்தில் சிங்கள இனவாதிகளுக்கு இடமில்லை என புத்தளம் மாவட்ட பௌத்த தேரர்கள் ஒன்றியத்தின் செயலாளரும் புத்தளம் மற்றும் ஆனமடுவ பௌத்த தேரர்கள் ஒன்றியத்தின் தலைவருமான வெடத்த சோமவன்ஸ தேரர் தெரிவித்தார்.

பல்லாண்டு காலமாக புத்தளத்தில் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வரும் சிங்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மத்தியில் பிளவினை ஏற்படுத்த ஒருபோதும் இடமளியோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளிடம் பணத்தினை வாங்கிக்கொண்ட ஒரு சிறிய குழுவினரே முஸ்லிம் - சிங்கள மக்களின் உறவுகளில் விரிசலினை ஏற்படுத்த முயல்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

"சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும்; இனவாதிகளுக்கு இடமளிக்காமல் தொடர்ந்து எமது ஒற்றுமையினை வலுப்படுத்த வேண்டும். ஒரு செயலினை ஊடகத்தில் பார்த்தால் அதன் உண்மை தன்மையினை தேடி அறிந்து கொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .