2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் மாணவன் பலி; மாணவர் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

தப்போவ பிரதீபாகம பிரதேசத்திற்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மாணவர் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிசார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிள்; ஒன்று டிரக்டர் வண்டியுடன் மோதியே இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தப்போவ மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ரந்திக சுபாஷ் (வயது 17) எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் சகோதரியான மாணவியும் அவர்களது உறவினரான மற்றொரு மாணவரும் இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை விட்டு மூவரும் மோட்டார் சைக்கிலொன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று  விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் கருவலகஸ்வௌ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .