2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவிலிருந்து வந்தவர் அரசுக்கு சேறு பூசுகின்றார்; ஜோன்ஸ்டன்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 10 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் அண்மையில் இணைந்து கொண்டு எமக்கு சேறு பூசி வருகின்றார். அவரும் தற்போது அரசாங்கத்தில் உள்ளதை மறந்த செயற்படுகின்றார் என்று கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கையில் இரண்டாவது கூட்டுறவு மொத்த மெகா விற்பனை நிலையத்தை நேற்று முன் தினம் குருநாகலையில் திறந்து வைத்த அவர்,அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:-

 இந்த நபர் வெங்காயம், உருளைக்கிழங்கு பற்றிப் பேசி அமைச்சரான எனக்கு இழுக்கை ஏற்படுத்தி வருகின்றார். அரசாங்கத்தில் இருந்து கொண்டு அமைச்சர் ஒருவரை விமர்சனம் செய்வது முறையற்ற செயலாகும்.தான் இணைந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நான் ஜனாதிபதிக்கு நம்பிக்கை உடையவனாகவே உள்ளேன்.

நான் உண்ணவும், அருந்தவும் கொடுத்து மக்களைக் கவர்ந்து வருவதாக அந்த நபர் கூறி வருகின்றார்.இன்று நேற்றல்ல எனது தந்தையின் காலத்திலிருந்தே நாம் மக்களைக் கவனித்து வருகின்றோம் அதனால் மக்கள் எம்முடன் அணிதிரண்டு உள்ளனர்.

இதை அவர் உணர வேண்டும்.எனவே அவர் எமக்கு அரசியல் கற்பிக்கத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X