2025 மே 15, வியாழக்கிழமை

கற்பிட்டி மீனவர்களுக்கு வலைகளும் பாதுகாப்பு அங்கியும் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 10 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


கற்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட நிழல் தரும் கட்டிடங்களின் திறப்பு விழா நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று செவ்வாய் கிழமை  கற்பிட்டியில் நடைபெற்றது.

இதன் போது சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நிழல் வழங்கும் கட்டிடங்கள் சோற்றுபிட்டி வாடி, ஆணைவாசல் பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டதுடன், 57 மீனவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் பெறுமதியான வலைகளும், 50 மீனவர்களுக்கு தலா இரண்டாயிரத்து ஐநூறு வரை பெறுமதியான பாதுகாப்பு அங்கியும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அண்டனி, கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ், கறபிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .