2025 மே 14, புதன்கிழமை

வயற்காணிகளை மேட்டுநிலக் காணிகளாக்கும் செயற்பாடு அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் நகரத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வயற்காணிகளை மேட்டுநிலக் காணிகளாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக அநுராதபுரம் கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் ஆர்.எம்.ஜீ;.சனாரத்ன தெரிவித்தார்.

வயற்காணிகளை மேட்டுநிலக் காணிகளாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களை கோரியுள்ளார்;.

அநுராதபுரம் நகரத்தை அண்டிய அண்டிய பகுதிகள் மற்றும் பிரதான வீதிகளிலுள்ள வயற்காணிகளை கூடுதல் விலைக்கு ஒரு சிலர் பெற்று ஹோட்டல்களை அமைத்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் பொதுமக்கள் பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்த  வேண்டும் எனவும் அவர்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .