2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தனியார் பஸ்களில் பெண் நடத்துநர்

Super User   / 2013 செப்டெம்பர் 23 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அத்துல பண்டார


இலங்கையில் முதல் தடவையாக தனியார் பஸ்களில் பெண்களை நடத்துநராக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான ஆர்.சிரிமாவதி எனும் பெண் ஹொறவபொத்தனை-வஹல்கட பஸ்ஸில் நடத்துநராக பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரிமாவதி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பார்வையிட்ட போக்குவரத்து அதிகார சபை இவருக்கு வாய்ப்பு அளித்து நடத்துநர் அனுமதிப்பத்திரத்தையும் வழங்கியுள்ளது.

வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எச்.பி.சீமசிங்கவின் அங்கிகாரத்துடன் பெண்களை பஸ் நடத்துநராக நியமனம் செய்தலை தொடங்கியுள்ளதாக வட மத்திய போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் கூறினார்.

  Comments - 0

  • சீலன் Tuesday, 24 September 2013 06:17 AM

    பிறகு, ஏடாகூடமா நடந்துபோச்சுன்னு பஸ்ஸை கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேஷன்ல நிறுத்தக்கூடாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X