2025 மே 14, புதன்கிழமை

வாக்குச்சீட்டுகள் நீதிமன்றில் ஒப்படைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்,சென். அன்றூஸ் கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வாக்குச்சீட்டுகள் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய இரண்டு பொதிகளே நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்றிரவு ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை அவதானித்ததுடன் பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .