2025 மே 14, புதன்கிழமை

வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 28 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை நிர்மலபுர எனும் பிரதேசத்தில் வீடு ஒன்று தீயில் எரிந்ததில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வீட்டில் தனிமையிலிருந்த 58 வயது மூதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை அங்கு சென்றுள்ள அந்த பெண்ணின் மூதாட்டியின் பிள்ளைகள் வீடு எரிந்துள்ள விடயத்தை அறிந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த பொலிசார் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .