2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பள்ளிவாசலில் திருடிய மூவருக்கு பிணை

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கூறப்படும் மூன்று சிறுவர்களும் நேற்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலின் உண்டியல் உடைத்து பணம் திருடியதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த மூன்று சிறுவர்களும் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 25,000 ரூபா சரீர பிணையில் மூன்று சிறுவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான முழு அறிக்கையினை எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X