2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பிரதேச ஊடகவியலாளரின் வீட்டில் திருட்டு

Super User   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பிரதேச ஊடகவியலாளரொருவரின் வீட்டில் நேற்று சனிக்கிழமை திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு மடி கணினிகள், புகைப்பட கருவி, கேஸ் சிலிண்டர் உட்பட மேலும் சில பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

குறித்த ஊடகவியலாளர் குடும்பத்தினரின் வீட்டுக்கு சென்று இன்று காலை வீடு திரும்பிய போது, வீட்டில் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதினை அறிந்து புத்தளம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டின் பின்பகுதி கதவினை உடைத்து உற்புகுந்துள்ள திருடர்கள் வீட்டின் அலுமாரியினை உடைத்து பணம் மற்றும் நகைகளினை தேடியுள்ளதுடன் வீட்டிலிருந்த மடிக்கணினிகள் இரண்டையும் புகைப்பட கருவி உட்பட சில பொருட்களினை திருடிக்கொண்டு வீடு முழுவதும் மிளகாய் தூளினை தூவி விட்டு சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X