2025 ஜூலை 12, சனிக்கிழமை

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை   நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முந்தல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அண்மையில் மஹாகும்புகடவல பிரதேசத்தைச் சேர்ந்த  வியாபாரி ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்படி சந்தேக நபர் மதுரங்குளி பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் உள்ள  குடிசை ஒன்றிலிருந்து  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் விளையாட்டு துப்பாக்கி ஒன்றையும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் விளக்குமாறுகள் செய்து விற்பனை செய்பவர் ஆவார். இந்த நிலையில்,  விளக்குமாறுகளை கொள்வனவு செய்வதுபோன்று  அவரின் வீட்டுக்குச்  சென்று சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தும்மலசுரிய, கொஸ்வத்த, குளியாபிட்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற  கொள்ளைச் சம்பவங்களுடன் இந்தச் சந்தேக நபர் தொடர்புடையவர் என்பதுடன்;, இவர்  நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .