2025 மே 14, புதன்கிழமை

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத்தலைவர் சரண்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமந்த பெரேரா இன்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனியார் பஸ் ஊழியர்கள் மூவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் சரணடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ் ஒன்றின் ஊழியர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளதாகவும் அவரை மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .