Kogilavani / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகர சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 39 முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வொன்று புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (10 ) இடம்பெற்றது.
புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸின் வழிகாட்டலின் கீழ் இந்த செயலமர்வு இடம்பெற்றது.
முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் சுகாதார துறையை மேம்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் வளவாளர்களாக புத்தளம் சுகாதார பணிமனையின் சுகாதார போதனாசிரியர்களான எம்.எச்.எம்.அபூசாலிபு, கீதா ஐராங்கனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறு வயதிலிருந்தே சுகாதார பழக்க வழக்கங்களை நடைமுறைபடுத்துதல் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025