Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் வியாழக்கிழமை (12) காலை புத்தளம் தபால் நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் இடம்பெற்றது.
புத்தளம் நகரில் நடைபாதைக்கு அருகில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் அழகிய நகரான புத்தளம் நகரின் அழகு தன்மையை அழித்து விட அனுமதியளிக்க வேண்டாம் என புத்தளம் நகரசபை உறுப்பினரும் தில்லையடி பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திர அமைப்பாளருமான எஸ்.ஏ. சதூர்தீனும் இரு வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் நகரில் நடை பாதைகளில் காணப்பட்ட 190 பெட்டிக்கடைகளை 'புதிய புத்தளம்' அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை, புத்தளம் பொலிஸ் மற்றும் புத்தளம் நகர சபையின் உதவியின் மூலம் 2012ஆம் ஆண்டு அப்புறப்படுத்தி அதற்கு மாற்றீடாக வேறு ஒரு இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தேசிய ரீதியாக அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சிறு வியாபாரிகள் தமக்கு நகர சபையால் ஒதுக்கி தரப்பட்ட இடத்தில் வியாபாரம் குறைவு என்றும் பழைய இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதி தரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் அழகிய நகரமாக முதலாம் இடத்தை பிடித்துள்ள புத்தளம் நகரின் அழகினை அழிக்க முயல்பவர்களுக்கு எதிராக புத்தளம் நகர சபை உறுப்பினரும் தில்லையடி பிரதேச ஸ்ரீ லங்கா சுதந்திர அமைப்பாளருமான எஸ்.ஏ. சதூர்தீன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரம் தொடர்பாக புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்தையொன்றும் இடம்பெற்றுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago