Princiya Dixci / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸூக்கு வழங்கப்பட்ட விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வீட்டு மற்றும் சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு மற்றும் ஆனமடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்ட உதவி வழங்கும் நிகழ்வு புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலாவி பிரதேசத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு சமையல் எரிவாயுக்கள், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸினால் வழங்கப்பட்டன.
தனது விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வாறான சேவைகள் எல்லா பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் இதன்போது தெரிவித்தார்.


23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago