Princiya Dixci / 2015 மார்ச் 04 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
மாரவில லங்சிகம பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (03) இரவு 12 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
நாத்தாண்டி மரந்த இத்தமல்கம பிரதேசத்தைச் சேர்ந்த எச்.கே.ரங்கன நிசாந்த (வயது 40) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ், உயிரிழந்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் மங்களஎளிய பிரதேசத்தைச் சேர்ந்த பஸ் வண்டியின் சாரதியைக் கைதுசெய்துள்ள மாரவில பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago