2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

3 மாடி கட்டிடத்தின் கூரையிலிருந்து விழுந்து 14 வயது மாணவன் பலி

Super User   / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புறா பிடிப்பதற்காக, நாத்தாண்டியவிலுள்ள பௌத்த விகாரையொன்றில் கூரையில் ஏறிய 14 வயது மாணவனொருவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சிறுவன் மேலும் இரு சிறுவர்கள் சகிதம் புறா பிடிப்பதற்காக, நாத்தாண்டிய புஷ்பாராம விகாரையின் 3 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் உச்சியில் அன்டனா கம்பி வழியாக ஏறியதாகவும் இறங்க முற்படும்போது 35 அடி உயரத்திலிருந்து தவறி வீழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜே.எம்.சந்துன் தில்ஷான் ஜயசேகர எனும் சிறுவனே உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். அச்சிறுவனின் சடலம் மாரவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • avathaani Friday, 25 November 2011 08:55 PM

    கூரை ஏறி கோழி பிடிக்க இயலாத.. என்ற பழமொழியை புறா பிடிக்க என்று மாற்றினாலும் இழந்த உயிரை பெற முடியாதே? சதுன் டில்சான் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X