Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
இவ்வாண்டு நடைப்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட 153 தமிழ் மொழி மூல மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இவற்றுள் புத்தளம் வடக்கு பிரிவில் 80 மாணவர்களும், புத்தளம் தெற்கில் 31 மாணவர்களும் கற்பிட்டி பிரிவில் 38 மாணவர்களும், ஆனமடு மற்றும் பள்ளம ஆகிய பிரிவுகளில் முறையே 1, 3 மாணவர்களுமாகவே மொத்தம் 153 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடம் இப்பரீட்சையில் 144 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புத்தளத்தில் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் 31 மாணவர்களும், புத்தளம் செய்னப் ஆரம்ப பாடசாலையில் 23 மாணவர்களும், புத்தளம் இந்து கல்லூரியில் 08 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் கடந்த 19 வருடங்களின் பின் தேத்தாபிள்ளை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் மாணவரொருவர் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
13 minute ago