2025 மே 23, வெள்ளிக்கிழமை

500,00 மெட்ரிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
இம்முறை பெரும்போகத்தின் போது விவசாயிகளிடமிருந்து 500,00 மெட்ரிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தும் வசதிகளை மேற்கொள்ளவுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் பிரதேச முகாமையாளர் பந்தல குமார தெரிவித்தார்.

சேதனப் பசளையினை பயன்படுத்தி விளைவித்த நெல்லினை ரூபா 40இற்கும் இரசாயன உரவகைகளைப் பயன்படுத்தி விளைவித்த நாடு வகை நெல்லினை ரூபா 32இற்கும் சம்பா வகை நெல்லினை ரூபா 35இற்கும் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக நெல் கொள்வனவு அதிகார சபையினால் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லினை சதொச ஊடாக அரிசியாக்கி சந்தையிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2011/2012 போகங்களின் போது கொள்வனவு செய்யப்பட்ட 42,000 மெட்ரிக் தொன் நெல் அனுராதபுரத்திலுள்ள களஞ்சியசாலைகளில் தற்பொழுதும் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X