2025 மே 15, வியாழக்கிழமை

ரூ.9 இலட்சம் மோசடி; பெண்ணுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 08 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு அனுப்புவதாக கூறி சுமார் 9 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடுகண்ணாவை நக்கமுவ பிரதேசத்தைச்சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கற்பிட்டியை சேர்ந்த ஒருவரையே இங்கிலாந்துக்கு அனுப்புவதாக கூறியே மேற்குறிப்பிட்ட தொகையை குறித்த பெண் மோசடி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணை புத்தளம் விசேட விசாரணை பிரிவினர் சிலாபத்தில் வைத்து இன்று கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பணத்தை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுவர் குறித்த பெண்ணிக்கு வங்கிக்கணக்கிற்கு வைப்பிலிட்டுள்ள ரசீதை பயன்படுத்தியே அந்த பெண்ணை விசேட விசாரணை பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .