ரஸீன் ரஸ்மின் / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீர்பாசன மற்றும் நீர் வளமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் முயற்சியில், ஆனமடுவ தேவாலய சந்தி, தாமரக்குளம் மற்றும் உஸ்வெவ அகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுத்தமான குடிநீர்த் திட்டம், மக்கள் பாவனைக்காக அண்மையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஆரோ பிளேன் திட்டத்தின் கீழ் குறித்த பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, குடிநீர் விநியோகமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனமடுவ தாமரக்குளம் மற்றும் தேவாலய சந்தி ஆகிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு தலா 26 இலட்சம் ரூபாயும், நவகத்தேகம உஸ்வெவ பிரதேசத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 23 இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த மூன்று பிரதேசங்களிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்துவைத்ததுடன், குடிநீர் விநியோகத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago