2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

உடற்கல்வி போதனாசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

எம்.யூ.எம். சனூன்   / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாவருக்கும் விளையாட்டு” எனும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் வலய கல்வி பணிமனை ஊடாக ஆறு விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக புத்தளம் கல்வி வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 உடற்கல்வி போதனாசிரியர்களுக்கான பயிற்சி  செயலமர்வு அண்மையில் (30,31) புத்தளம் சென் அன்ரூஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

உடற்கல்வி தொடர்பான கல்வி அமைச்சின் வளவாளரும், புத்தளம் கல்வி பணிமனைக்கான கால்பந்தாட்ட இணைப்பாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் பயிற்சிகளை வழங்கி வைத்தார்.

புத்தளம் கல்வி பணிமனையின் உடற்கல்வி பணிப்பாளர் குசலானி, கல்வி பணிமனையின் அபிவிருத்திக்கு பொறுப்பான அர்ஜுன, ஆசிரிய ஆலோசகர்களான பளீல் மற்றும் ஹனிபா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X