2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் கூபா நகர் ( சார்ஜாபுரம்) கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

டுபாய் நாட்டின் சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் முகாமையாளர் ஹம்தான் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டு குறித்த தையல் பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தார்.

அத்துடன், சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிதி உதவியுடன் குறித்த கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகின்ற மருத்துவ நிலையம், சிறுவர் பூங்கா மற்றும் பாலர் பாடசாலை என்பனவற்றையும் சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் முகாமையாளர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜௌபர் மரிக்கார், செரண்டிப் பவுன்டேஷனின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ராபிக், இந்நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ஆசிரியர் பீ.எம்.எம்.நளீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

டுபாய் நாட்டின் சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிதி உதவியுடன், இலங்கையில் இயங்கிவரும் செரன்டிப் பவுன்டேஷனின் மேற்பார்வையிலும் நிர்மாணிக்கப்பட்ட குறித்த தையல் பயிற்சி நிலையத்தில் ஒரே தடவையில் 30 பேர் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இதன்போது, குறித்த கிராமத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் கிராம மக்கள் சார்பில் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.

டுபாய் நாட்டின் சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் குறித்த கிராமத்தில் முன்னெடுக்கப்படும் பணிகள் குறித்து அந்த நிறுவனத்தின் முகாமையாளருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், கிராம மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஏனைய குறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் குறிப்பிட்டார்.

மேலும், “இக்கிராமத்தில் வாழும் பிள்ளைகள் நல்ல வைத்தியர்களாக, ஆசிரியர்களாக, பொறியியலாளர்களாக வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசையாகும். ஒரு கிராமத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சகல அடிப்படைத் தேவைகளையும் நாம் நிறைவேற்றித் தந்துள்ளோம். இவற்றைப் பாதுகாப்பது உங்களது கடமையாகும்” என டுபாய் நாட்டின் சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் முகாமையாளர் ஹம்தான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X