2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

பட்டங்கள் பறக்க விடும் போட்டி

எம்.யூ.எம். சனூன்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புத்தளம் நகர சபை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முன்பள்ளி மாணவர்களுக்கிடையிலான பட்டங்கள் பறக்க விடும் போட்டி, எதிர்வரும் திங்கட்கிழமை (02) காலை 8 மணிக்கு புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

நகர சபையின் செயலாளர் நந்தன சோமதிலகவின் வழிகாட்டலில் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், புத்தளம் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி ரூபிகா மற்றும் நகர சபையின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்தியா ஆகியோர் இணைந்து, இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தப் போட்டியில் புத்தளம் நகரின் முன்பள்ளிகளிருந்து தலா ஆறு முன்பள்ளி மாணவர்கள் வீதம் கலந்துகொள்ளவுள்ளனர். “சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் போட்டி இடம்பெறவுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X