2025 ஜூலை 30, புதன்கிழமை

புத்தளம் பாடசாலைகளுக்கு விடுமுறை

Editorial   / 2024 மே 20 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமையும் (21), நாளை மறுதினம் புதன்கிழமையும் (22) விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் பணித்துள்ளார்.

 தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனை கவனத்திற்கொண்ட மாகாண ஆளுநர் , புத்தளம் மாவட்டச் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி   பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க பணித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .