2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட தொழில் சந்தை

Editorial   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட இளைஞர்களும், யுவதிகளும் அதிகரித்த வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில், புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த தொழில் சந்தை நிகழ்வுகள், சனிக்கிழமை (16) காலை சிலாபம் பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள விஜயராம பௌத்த விகாரையில் நடைபெற்றன.

புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக தொழில், தொழில் சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர, முன்னாள் பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான விக்டர் அன்டனி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் புத்தளம் நகரில் இருந்தும் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் விசேட வேண்டுகோளின் பேரில், விரைவில் இதேபோன்ற ஒரு நிகழ்வு புத்தளம் நகரிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X