Editorial / 2017 நவம்பர் 14 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காஞ்சன குமார ஆரியதாச
எரிபொருள் கொண்டு செல்லும் பவுசரில் கொண்டு செல்லும் போது, பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கும் மோசடியொன்று, தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், நேற்று (13) நண்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலேவெல மகுலு கஸ்வேவ் பகுதியிலுள்ள, கைவிடப்பட்ட உலோகச் சுரங்கப் பகுதியில் வைத்தே, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டமையை, பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகத்துக்குரிய குறித்த பவுஸர், திருகோணமலை மாவட்டத்துக்கான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.எம். மஹரூபுக்குச் சொந்தமானது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது, அந்த பவுஸரிலிருந்து, 100 லீற்றருக்கும் மேற்பட்ட அளவிலான பெற்றோலை, குழாய்களைப் பயன்படுத்தி எடுத்து, அதைப் போத்தல்களில் நிரப்பும் நடவடிக்கையில், அந்த பவுஸரின் சாரதியும் அவரின் உதவியாளரும் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட அளவுக்கான மண்ணெண்ணெய், உள்ளே சேர்க்கப்பட்டது.
சாரதியையும் அவரது உதவியாளரையும் கைதுசெய்த பொலிஸார், பெற்றோல் கொண்டுசென்ற பவுஸரையும் மண்ணெண்ணெய் கொண்டுசென்ற சிறிய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பவுஸர், இந்தியன் ஒயில் கம்பனிக்கான (ஐ.ஓ.சி) பெற்றோலைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டது எனவும், விசாரணைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
எனினும், இது தொடர்பாக மஹரூப் எம்.பியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இம்மோசடிக்கும் தனக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.
அத்தோடு, சாரதியுடனும் அவரது உதவியாளருடனும், தொலைபேசி மூலமாகத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடொன்றை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026