2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

மனைவிக்கு தீ வைத்த கணவருக்கு மறியல்

Editorial   / 2017 செப்டெம்பர் 02 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியை தீயூட்டு கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கணவனை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பதில் நீதவான் கே. ஜி.குணதாச உத்தரவிட்டுள்ளார்.

கட்டானை, ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த அந்தோனிலாகே யூட் குமார என்ற நபரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி, வெளிநாடொன்றில்  பணியாற்றிவிட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார். கடந்த, புதன்கிழமை இரவு, 11 மணியளவில் சந்தேக நபர், மனைவி தீ மூட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும், தீக்காயங்களுக்கு உள்ளான 34 வயதுடைய பெண், அயலவர்களின் உதவியுடன், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ தினத்தன்று, சந்தேகநபரை கைது செய்த கொச்சக்கடை பொலிஸார், அவரை, மன்றில் ஆஜர்செய்த  போதே, நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X