Editorial / 2018 ஜூன் 27 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த தலைமை மாணவத் தலைவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை, அரச சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு, சிலாபம் மாவட்ட நீதவான் மஞ்ஜுல ரத்நாயக்க, நேற்று (26) உத்தரவிட்டார்.
சவரான பெரிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில், 11ஆம் தரத்தில் கல்வி பயின்ற மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைஸூல் என்ற மாணவன், கடந்த 10ஆம் திகதியன்று இரவு, தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இக்கொலைக்குக் காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே பாடசாலையில், தரம் 10இல் கல்வி பயின்றுவரும் 15 வயது மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று இரவு, சவரான முஸ்லிம் பள்ளியில் இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த மேற்படி மாணவன், தனது நண்பனொருவனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வழியில் மறைந்திருந்த சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும், வீதியோர மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, மாணவன் மீது, பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், 13 நாள்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago