Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 29 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
படைப்புழுக்கள் ஒரு பகுதியில் பரவினால் அதனை அழிப்பது கடினமான காரியம் என்பதுடன், விவசாயிகள் இந்தப் புழு தொடர்பில் அறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது பற்றிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இயற்கை கட்டுப்பாடு, சிறந்த முகாமைத்துவம் ஆகியன காணப்படாத நிலையில், பயிர்களுக்கு பெருமளவு பாதிப்பைப் படைப்புழு ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சோளப் பயிர்ச்செய்கை பெருமளவு இடம்பெறும் பகுதிகளில் இந்தப் படைப்புழுக்களின் தாக்கம் பெருமளவு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கரும்பு செய்கையையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெல் அடங்கலாக ஏனைய பயிர்களையும் பாதிக்கக்கூடிய நிலை காணப்படுவதாக, பல தரப்புகளாலும் அஞ்சப்படுகிறது.
“படைப்புழுக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உலகின் ஏனைய நாடுகளில் இந்த தாக்கத்தால் கற்றுக் கொண்ட விடயங்களை புரிந்து கொள்வது போன்றன இலங்கையில் இந்தப் புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய முதல் படிமுறையாக அமைந்துள்ளது” என, உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பின்புல தகவல்களை விவசாயம், உயிரியல் மற்றும் சூழலியல் அமைச்சுடன் உணவு மற்றும் விவசாய ஸ்தாபகம் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அடிப்படை விடயங்களையும் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிநாசிகளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, இரசாயன கிருமிநாசினிகளின் தாக்கத்தை குறைப்பது, தீர்மானமெடுப்போர் மற்றும் விவசாயிகளுக்கு இலத்தின் அமெரிக்காவில் விவசாய-சூழலியல் வழிமுறைகள் போன்றன தொடர்பில் விளக்கங்கள் உள்ளடங்கியிருந்ததுடன், ஆபிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் சிறியளவில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago