Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. திலீபன்
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, யாழ்ப்பாணம்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
உங்களுடைய நிகழ்கால, எதிர்கால நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்
உங்களுடைய நிதிக் குறிக்கோள்கள் எவை?
அடுத்துவரும் சில ஆண்டுகளில் நீங்கள் எதை விரும்புகின்றீர்கள்?
பிரத்தியேகமான அவசர நிதியம்
என்னுடைய மேலதிக கல்வி
எனது திருமணம்
சொந்தமாக ஒரு கார்
சொந்தமாக ஒரு வீடு
நீண்டகாலத்தில் நீங்கள் எதை விரும்புகின்றீர்கள்?
எமது குழந்தைகளுக்கான கல்வி நிதியம்
சுயதொழில் முயற்சியை ஆரம்பித்தல்
ஈட்டுக்கடன்களை முடிவுக்கு கொண்டுவருதல்
ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தல்
எனது மரணத்துக்குப் பின் காத்திரமான நிதித் திரட்டினை எனது குடும்பம் அனுபவித்தல்
சேமிப்பின் மகிமை
எவ்வளவு விரைவாக நீங்கள் சேமிக்கத் தொடங்குகின்றீர்களோ அந்தளவுக்கு சேமிப்பின் மகத்துவத்தை உங்களால் உணரமுடியும்.
நீங்கள் சிறு வயதிலிருந்து சேமிப்புப் பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்களேயானால், கூட்டு வட்டியின் விளைவுகளை (நன்மைகளை) நீங்களே மிக விரைவாக உணரமுடியும்.
இது ஒரு மிகவும் வலுவான பொறிமுறை ஆகும். உங்கள் சேமிப்பு வட்டியானது உங்களுக்கான, செயற்படும் காலத்துடன் இணைந்து, இப்பொறிமுறைக்கு வலுச்சேர்க்கின்றது.
நீங்கள் பணத்தைச் சேமிக்கின்ற, முதலீடு செய்கின்ற போது, வட்டியை வருமானமாகப் பெறுகின்றீர்கள். முதல் தொகையின் (The original investment amount) அடிப்படையில், உங்களது உழைப்பான வட்டி வருமானம் அமைகின்றது. தொடர்ச்சியாகச் சேமிக்கின்ற போது, உழைக்கப்படும் வட்டியானது, உங்கள் முதல் தொகையுடன் காலத்துக்குக் காலம் சேர்க்கப்படுவதால், உழைக்கப்பட்ட வட்டி வருமானமும் உங்களுக்கான வட்டியை உழைக்கின்றது.
நீங்கள் முதல் தொகைக்கான வட்டியையும் கடைசியாக உழைத்த வட்டி வருமானத்துக்கான வட்டியையும் சேர்த்து, இறுதியில் பெற்றுக் கொள்ள முடிதல் கூட்டு வட்டிப் பொறிமுறை எனப்படும். இது நீண்டகாலத்தில் சேமிப்புகளைத் தூண்டும் திறவுகோலாக அமைகின்றுது.
வட்டி என்பது உங்கள் பணத்துக்கான ஒரு நட்டஈடு. உங்கள் நுகர்வுகளைத் தியாகம் செய்து அல்லது காலம்தாழ்த்தி பணத்தை வங்கி போன்ற நிதிநிறுவனங்களில் வைப்பில் இடுவதால் அந்தக் காலத்தில் உங்களுக்கு ஏற்படக்கூடிய நட்டத்துக்கான ஓர் இழப்பீடு.
இந்த நட்டஈடு நாட்டில் நிலவுகின்ற பணவீக்கம், மத்திய வங்கியால் பேணப்படும் கொள்கை வட்டிவீதங்களில் தங்கியுள்ளது.
தொழில்முறை நிதிஆலோசகர் அவசியமா?
உங்களுக்கு தொழில்முறை நிதி ஆலோசகர் ஒருவர் தேவையா? இல்லையா? என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தங்கியுள்ளது.
உங்களிடம் போதிய அளவு நேரம், சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய ஆற்றல், நிதிச்சந்தை, முதலீடுகள் தொடர்பில் ஒரு தெளிவான புரிந்துணர்வுடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்களே உங்களுக்கான நிதி ஆலோசகராக இருக்க முடியும்.
நிதிச்சந்தை முதலீட்டு மூலங்கள் தொடர்பாக ஒரு தெளிவற்ற நிலையை நீங்கள் உணர்ந்தால், விசேட முதலீட்டுத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் தொழில்முறை நிதிஆலோசகர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் சிறப்பாக அமையும்.
கருத்தில் கொள்ள வேண்டியவை:
நிதி ஆலோசகர் ஒருவரைத் தெரிவு செய்கின்ற போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
அவர்கள் நிச்சயமாக உங்களுடைய பின்வரும் தனிப்பட்ட விடயங்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக, அதாவது உங்களுடைய முதலீட்டுக் குறிக்கோள்கள், உங்களுடைய நிதி அறிவு, ஆளுமை, முன் அனுபவம், உங்களுடைய தற்போதைய நிதி நிலைமை, இசைவாக்க இடர்நேர்வு மட்டம் (Loss of capital) தொடர்பில் தெளிவான புரிந்துணர்வைக் கொண்டிருப்பதுடன், உங்களுக்கான முதலீட்டுத் தெரிவுகளைப் பரிந்துரைப்பதற்கு முன்னர், உங்களுடைய இடர்நேர்வு சுயகோவையை (Risk profile) மிகவும் அவதானமாக மதிப்பீடு செய்வார்கள்.
அவர்களால் பரிந்துரைக்கப் படுகின்ற முதலீடுகள் எந்த வகையில் உங்களுடன் பொருந்துகின்றது என்பது தொடர்பான சரியான விளக்கம், முதலீடுகளின் இடர்நேர்வு மட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்துகின்ற ஆவணங்களை உங்களுக்கு, வழங்கி அதற்குரிய தர்க்கரீதியான நியாயப்படுத்தல்களை வழங்குவார்கள்.
அவர்களின் சேவைகள், முதலீடுகளின் இடர்நேர்வுகளை குறைக்கும் வகையில், முதலீடுகளைப் பன்முகப்படுத்தப்பட்டு இருப்பதுடன், அது உங்கள் புரிந்துணர்வுக்கு உட்பட்டதாகவும், நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
நட்டம், இடர்நேர்வுகளைச் சமாளிக்கத்தக்க வகையிலான தேறிய சொத்துக் கட்டமைப்பை உறுதிப்படுத்தல் அவசியம்.
01ஆம் வினா :- எவ்வளவு கால முன் அனுபவத்தைக் கொண்டுள்ளீர்கள்?
02ஆம் வினா :- எத்தகைய கல்வித் தகைமையைக் கொண்டுள்ளீர்கள்?
03ஆம் வினா :- எந்த வகையான சேவைகளை வழங்குகின்றீர்கள்?
04ஆம் வினா :- நிதிக் குறிக்கோள்களுக்கான திட்டமிட்ட அனுகுமுறை என்ன?
05ஆம் வினா :- எனது நிதி ஆலோசகராக நீங்கள் மட்டுமாக செயற்படுவீர்கள்?
06ஆம் வினா :- எந்த அடிப்படையில் உங்களுக்கான ஊதியம் கிடைக்கின்றது?
07ஆம் வினா :- பொதுவாக உங்களுடைய அறவீடுகள் எவ்வாறு அமைந்திருக்கும்?
08ஆம் வினா :- பரிந்துரைகள் எந்த மூன்றாம் நபருக்குப் பயனளிக்கும்?
09ஆம் வினா :- நீங்கள் நீதிமன்றின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டவரா?
10ஆம் வினா :- எமக்கிடையிலான உடன்படிக்கை எழுத்து வடிவிலானதா?
(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago