Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுடைய நிகழ்கால, எதிர்கால நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்
-மு. திலீபன்
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, யாழ்ப்பாணம்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
வியாபார இடர்நேர்வு (Business Risk):
கம்பனியினது இலாப இயலுமையானது, தொடர்ச்சியான பாரிய அளவில் குறைவடைந்து செல்லுதல், கம்பனி முறிவடைதல், கோளமயமாதல்களில் தாக்கம், முறையற்ற மேலாண்மைகளால் இவ்வாறான வியாபார இடர்நேர்வுகள் விளைவிக்கப்படுகின்றன.
முறைதவறிய பெருநில ஆளுகை (Corporate misgovernance):
கம்பனிகளில் இடம்பெறும் பாரிய அளவிலான கொடுக்கல் வாங்கல்களால் சில சந்தர்ப்பங்களில் சிறிய முதலீட்டாளராகிய பங்குதாரர்களின் நலனுக்குத் தீங்கான விளைவுகளை எற்படுத்துகின்றது.
நாணயமாற்று இடர்நேர்வு (Currency Risk):-
அந்நிய நாணயமானது, திடீரென எமது நாணயத்துக்கு எதிராகத் திரும்பும் போது (பெறுமதி அதிகரித்தல்), வெளிநாட்டு முதலீடுப் பெறுமதிகளில் பாதகமான விளைவுகளை தோற்றுவித்தல்.
பணவீக்க இடர்நேர்வு (Inflation Risk):
பொது விலைமட்டமானது, தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுதல், மூலதனத்தின் மெய்ப்பெறுமதி, உங்களுடைய கொள்வனவு சக்தியையும் நலிவடையச் செய்கின்றது.
திரவத் தன்மை இடர்நேர்வு (Liquidity Risk):
முதலீட்டை இலகுவாகப் பணமாக மாற்ற, விற்றுத்தீர்க்க முடியாததுடன் அதிக காலதாமதத்தையும் எற்படுத்தும். பணம் நூறு சதவீதத் திரவத்தன்மையுடைய சொத்து என்பது, காலதாமதம், முதலிழப்பு இன்றி பணத்தைப் பணமாக மாற்றும் தனிச்சிறப்பியல்பைக் கருதும். சுயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள தயங்குகின்ற முதலீடுகள் திரவத்தன்மை குறைந்த அல்லது அற்ற முதலீடுகளாகக் கருதப்படும்.
கொள்கை இடர்நேர்வு (Policy Risk):
அரச மட்டத்திலான கொள்கைகள், ஒழுங்கு முறைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் உங்கள் முதலீடுகளில், பாரிய எதிர்மறையான தாக்கங்களை எற்படுத்தி விடுகின்றன.
மோசடி இடர்நேர்வு (Scams Risk):
சுயமான அறிவு, முன்பாதுகாப்பு போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்வதன் ஊடாகப் போலியான, மோசடியான முதலீட்டு பொறியில் இருந்து விலகியிருக்க முடியும். இலகுவாகவும் விரைவாகவும் இலட்சாதிபதியாகும் திட்டங்களைத் தவிர்த்தல்.
மீள்முதலீட்டு இடர்நேர்வு (Reinvestment Risk):
முதலீடுகளில் இருந்து பெறப்படுகின்ற வருமானங்களான வட்டி, பங்குலாபம் போன்றவற்றை மீள்முதலீடு செய்வதுடன் தொடர்புபடுகின்றது.
தரகர் தோல்வி (Broker Failure):
உங்களுடைய தொழிற்றுறை முதலீட்டுத் தரகர் வகையற்றுப் போனால், உங்கள் முதலீடுகள் ஆபத்தை எதிர்நோக்கும். அங்கிகரிக்கப்பட்ட, நீண்ட காலம் செயற்பட்ட, நிலைபேறான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுதல் நன்று.
தவறுதல் இடர்நேர்வு (Default Risk):
கடன் தொடர்பாக, கம்பனி, தனிநபர், தாம் கடன்கொடுத்தவருக்கு வழங்கிய உத்தரவாதத்தை நிறைவேற்றத் தவறுதல். உதாரணமாக, உரிய நேரத்தில் முதல் மற்றும் வட்டியைச் செலுத்தத் தவறுதல்.
இடர்நேர்வு மேலாண்மை
நீங்கள் முழுமையாக இடர்நேர்வுகளை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் எற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியமான மட்டத்துக்கு இடர்நேர்வுகளைக் குறைத்துக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் எத்தகைய முதலீடுகளைத் தெரிவு செய்துள்ளீர்கள்? அவற்றுடன் தொடர்புடைய மிகமுக்கிய இடர்நேர்வுகளைச் சரியாக இனம்கண்டு, அவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்ய விரும்புகின்ற முதலீட்டு வகைகள், அவற்றில் காணப்படும் சவால்கள் பற்றி ஆவலுடன் அறிந்து கொள்ள முற்படுங்கள். பொதுவாக நிறுவனங்களினால் வெளியிடப்படுகின்ற முன்விபரணங்கள், காலாண்டு மற்றும் ஆண்டறிக்கைகள், அறிவித்தல்கள் மற்றும் வணிக உடன்படிக்கையில் காணப்படும் இடர்நேர்வுகளுடன் தொடர்புடைய தகவல்திரட்டுகளுக்கு அதிக கவனம் செலுத்தி அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முற்படுங்கள். தொழிற்துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பைப் தேவைப்படின் நாடவும் முடியும்.
(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)
25 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
43 minute ago
47 minute ago