Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 05 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்குச்சந்தை முதலீடுகள் முயற்சியாண்மையின் ஓர் அங்கம்
(சென்றவாரத் தொடர்ச்சி)
வியாபாரத் தெரிவு :- எமது தெரிவானது பிழையாக அமையுமிடத்து ஈடுபடுத்திய மூலதனத்தை மட்டுமல்ல சிறந்த முதலீட்டு வாய்ப்பையும் இழக்க நேரிடும். இது பங்குமுதலீட்டுக்கு மட்டுமல்ல முயற்சியாண்மைக்கும் சாலப்பொருந்தும். முயற்சியாளன் தனது யோசனையினை (idea) சரியான நேரத்தில் உரியவாறு நடைமுறைப்படுத்தத் தவறினால் இழப்பு என்பது தவிர்க்க முடியாது.
5. முகாமையாளர் தெரிவும் மற்றும் தராதரம் :- முயற்சியாண்மையின் தொடர்ச்சியான வெற்றி அதன் முயற்சியாளன் மட்டுமன்றி அவனால் பணிக்கப்படும் தொழில் நிபுணத்துவக் குழுவிலும் (Management) தங்கியுள்ளது. அதாவது காலத்துக்கு ஏற்ப, புதிய திட்டங்களை அல்லது யோசனைகளை இணைத்து, வியாபார விரிவாக்கத்துக்கு முதுகெழும்பாக முயற்சியின் முகாமையும், அதன்தராதரமும் அமைகின்றன.
அவ்வாறான, பங்குமுதலீட்ைட ஆரம்பிக்கும் போது, நாம் தெரிவு செய்யும் கம்பனியின் முகாமையாளர்கள் மற்றும் நல்லாட்சித் தத்துவம் (Good corporate governance) தொடர்பாக கம்பனி கொண்டுள்ள கொள்கைளை மிகவும் நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். உங்கள் முதலீடுகளை அச்சமின்றி இவ்வாறான கம்பனிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.
6. முயற்சியாண்மையின் வெற்றியே புகழைத் தேடித்தரும் :- இவ்விரண்டு முயற்சியும் பலருக்கு, செல்வத்தை மட்டுமன்றி மதிப்பிட முடியாத புகைழயும் கொடுத்த பல உதாரணங்களை எமது வாழ் நாளில் அறிந்தோம். இதற்கு, அவர்களின் வெற்றியே வித்தாக அமைந்திருந்தது. இருந்தும், உண்மை என்னவெனில், பல ஆயிரக்கணக்கான முயற்சியாண்மையும் பங்குமுதலீடுகளும் தோல்விளைக் கண்டுள்ளன.
இவிரண்டும் ஓர் இலகுவான முயற்சியாக நாம் கொள்ளக்கூடாது.நாம் பங்குமுதலீட்டுக்கும் முயற்சியாண்மைக்கும் உள்ள சில ஒற்றுமைைய அவதானித்தோம். உண்மையில் பங்குமுதலீடுகள் முயற்சியாண்மையின் ஓர் அங்கமாக இருந்தும் ஒப்பீட்டளவில் சில தனித்தவமான சிறப்புக்களை அல்லது வசதிகளை தன்னகத்தே பங்குமுதலீடு கொண்டுள்ளது.
1. குறைந்த மூலதனத்தேவை :- பங்கு முதலீட்டை நாம் மிகவும் குறைந்த மூலதனத்துடன் அதாவது ஒரு சில ஆயிரம் ரூபாய்களுடன் ஆரம்பிக்க முடியும். ஆனால், முயற்சியாண்மை அவ்வாறில்லை. ஆரம்ப மூலதனமாக சில இலட்சங்களை வேண்டி நிற்பினும், தொடர்ச்சியாக மூலதனத்ைத ஈட்டவேண்டிய தேவையும் ஏற்படலாம்.
2. பன்முகப்படுத்தி முதலீடு செய்தல் :- நமக்கு வசதி இருப்பின் எனது முதலீடுகளை குறித்த வியாபாரத் திட்டங்களில் மட்டுமன்றி பல வேறுபட்ட வியாபார முயற்சிகளில் பன்முகப்படுத்தி முதலீடு செய்யும் வசதி பங்குமுதலீடுகளில் உண்டு. எல்லாத் துறைகளும் ஒரே நேரத்தல் சரிவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே முதலீடுகளைப் பன்முகப்படுத்தி எமது முதலீட்டுக்கான இடர்நேர்வுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். முயற்சியாண்மையில் குறித்த நேரத்தில் ஒர் குறித்த வியாபாரத்திட்டத்ைத மையப்படுத்தியே முதலீடு செய்ய முடியும்.
3. தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல் ஒப்பீட்டளவில் இலகு :- துரதிஷ்டவசமாக தவறான பங்குத்தெரிவு எமது முதலீட்டுத் தேக்கத்தில் இடம்பெற்றிருப்பின் அதனை நிவர்த்தி செய்வதற்கான பல சந்தர்ப்பங்களை பங்குமுதலீடு கொண்டுள்ளது. நீங்கள் பங்குகளை விற்பனை செய்து வரவிருக்கும் நல்ல சந்தர்ப்பத்ைத பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், முயற்சியாண்மையில் வியாபார முயற்சி வெற்றியடையவில்லை எனில், ஈடுபடுத்திய மூலதனத்ைத மீளப்பெறுவது என்பது மிகவும் கடினம். மேலும் புதிய யோசனைகளை உள்ளடக்கும் போது நட்டம் மட்டுமன்றி மேலதிக மூலதனத்தினையும் வேண்டிநிற்கும்.
4. இலகுவாகப் பணமாக மாற்றிக் கொள்ள முடிதல் :- பங்குமுதலீடு தேவைக்கு ஏற்ப இலகுவாக இலங்கைப் பங்குச்சந்தை ஊடாக சந்தை விலையில் கைமாற்றம் செய்து பணமாக மாற்றிகொள்ள முடியும். அதாவது பங்குகளை விற்பனை செய்து பணமாகமாற்றிக் கொள்ள முடியும். சந்தை விலை என்பது, பங்குச்சந்தையில் சுயாதீனமாக கொள்வனவாளர் மற்றும் விற்பனையாளர்களினால் தீர்மானிக்கும் விலை. கம்பனிகளின் பெறுபேறு மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற்றமடையும். முயற்சியாண்மையினைப் பொறுத்தமட்டில், சொத்துக்களை குறித்த காலவரைக்குள் விற்றுத்தீர்த்தல் என்பது ஒர் இலகுவான நடைமுறை அல்ல.
5. மேலதிக வருமானத்ைத ஈட்டுவதற்கான இலகுவான தெரிவாக அமைகின்றது :- வருமானத்ைத பெருக்குவதற்கான துணைமூலங்களில், எமது அடிப்படை வருமான மூலத்துக்கு, எந்தவித இடையூறும் இன்றி எமது இலச்சியத்தினைத் தொடர்வதற்கு மிகப்பொருத்தமான துணைமூலமாக பங்குமுதலீடு அமைகின்றது. அதாவது இணையத்தின் உதவியுடன் எங்கிருந்தும் சிமாட் டிவைஸ் ஊடாக முதலீட்ைட முகாமை செய்து கொள்ள முடிகின்றது. ஆனால், முயற்சியாண்மையில் இவ்வாறான சுதந்திரத்தை அனுபவித்தல் அரிது, கண்ணும் கருத்துமாய் வியாபார முயற்சியினை அவதானிப்பதன் மூலம் மட்டுமே அதனைத் சரியான பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.
இதுவரையில் பங்குமுதலீட்டுக்கும் முயற்சியாண்மைக்கும் இடையிலான சிறப்புக்கள் மற்றும் ஒற்றுமை, வேற்றுமை தொடர்பில் அவதானித்தோம். இருந்தும் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக முயற்சியாண்மை அமைகின்றது என்பதில் ஐயமில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்கியான முயற்சியாண்மையினால் உருவான சிறிய நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு கத்திரமானது. முயற்சியாண்மை ஒருவரை உணர்ச்சிகரமான தொழிலதிபராக மாற்றுகின்றது.
1. உங்கள் சுயசிந்தனை வெற்றி (Idea) அடைவதற்கான கனவுப் பயணமான அமைகின்றது :- முயற்சியாளன் தனது சுயசிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் மூலமாக முயற்சியாண்மை மட்டுமே அமைகின்றது. முயற்சியாளன் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடிய புதிய பொருட்களை உற்பத்தி செய்து தனித்துவத்தைப் பேணமுடியும். பங்குமுதலீட்டில் தெரிவிற்கு மட்டுமே இடமுண்டு.
2. உங்கள் வியாபார முயற்சி உங்கள் பெயரில் :- வியாபாரம் ஆரம்பித்த நாள்முதல் உங்கள் பெயரில் உங்கள் முயற்சி அமைந்திருக்கும். நிறுவனத்தின் உரிமையாளர் அந்த முயற்சியாண்மையின் சிந்தனையாளராக அமைகின்றார். பங்குமுதலீட்டைப் பொறுத்தமட்டில் ஆரம்பநிலையில் முதலீட்டாளன் சிறுபான்மையினராக (Minority shareholders) தான் இருக்க முடியும். முதலீட்டுப் பருமனுக்கு ஏற்ப சட்டத்தினால் உரிமைகள் மட்டுப்படுத்தப்படும். ஆனால் நீண்டகாலத்தில் மாறுபட வாய்ப்பு உண்டு.
3. சுய உடமை :- முயற்சியாண்மையினைப் பொருத்தமட்டில் உரிமையாளருக்கும் கம்பனிக்கும் அல்லது வியாபார முயற்சிக்கும் மிகவும் வலுவான பிடிப்பினைப் கொண்டிருக்கும். அதாவது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இருக்கின்ற பாசப்பிணைப்பிற்கு இணையானதாக அமைந்திருக்கும். பங்குமுதலீட்டில் அவ்வாறான உணர்வுபூர்வமான பிணைப்புக்களுக்கான வாய்ப்புக்கள் அரிது, பிணைப்புக்கள் சட்டங்களினால் வரையறுக்கப்பட்டுள்ளது.
துணிகரமான முயட்சியாளனுக்கு பங்குமுதலீடு மற்றும் முயற்சியாண்மை இவ்விரண்டுக்கும் உள்ள நன்மைகளும் தீமைகளும் வேறுபடலாம். இவ் இரண்டு முயற்சிகளும் அடிப்படையில் இடர்நேர்வுடன் நெருங்கிய தொடர்புபட்டவை. அவர்களின் முதலீட்டுப் பயணம் இவ் இடர்நேர்வினை வெற்றி கொள்வதில் தங்கியுள்ளது. பங்குமுதலீட்டு முயற்சியினைப் பொருத்தமட்டில் கூழாங்கற்களில் இருந்து இரத்தினக் கற்களை வேறுபடுத்தும்; முயற்சியாக விவரிக்கலாம்.
சிலர் இதனை ஒரு சவாலாகக் கொண்டு சொத்துக்களை இலகுவாகப் பெருக்கிக் கொள்கின்றனர். அதனை நாம் ஒரு தொழிலாக அன்றி ஆக கொண்டு நிதானமாக எமது தனிப்பட்ட நிதித்திட்டமிடலுக்கு அமைவாக முதலீட்டுப் பயணத்தினை ஆரம்பித்தால் எம்மை யாராலும் நெருங்க முடியாது என்பது வரலாறு.
- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு
18 minute ago
20 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
20 minute ago
28 minute ago