Editorial / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
12.08.2019
ஹஜ்ஜுப் பெருநாள் பொது, வங்கி விடுமுறை தினம் காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
13.08.2019
லயன் பிரெவரி, கொமர்ஷல் வங்கி மற்றும் நெஸ்லே லங்கா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு சுட்டி நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 2.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஹேலீஸ் ஃபப்ரிக் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
14.08.2019
நிகினி பௌர்ணமி விடுமுறை தினம் காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
15.08.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், கொமர்ஷல் வங்கி மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
16.08.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, டயலொக் அக்ஸியாடா மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 333 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் ஃபினான்ஸ் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் ஹேலீஸ் ஃபப்ரிக் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவில் பதிவாகியிருந்தது.
வாரத்தில் அபவிசு 0.82% சரிவையும் S&P SL20 1.68% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.4 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago