2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 19.08.2019 - 23.08.2019

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

19.08.2019  

ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், கார்கில்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 622 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஹேலீஸ் ஃபப்ரிக், பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு, மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்பட்டது.  

20.08.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்,  டயலொக் அக்ஸியாடா பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 383 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, HNB அஷ்யூரன்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள், பங்கு கொள்வனவில் பெருமளவு ஈடுபட்டனர்.  

21.08.2019  

டயலொக் அக்ஸியாடா, ஸ்ரீ லங்கா டெலிகொம், பிரவுண் அன்ட் கம்பனி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 671 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா, லங்கா ஐஓசி ஆகிய பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி,  ஹேலீஸ் ஃபப்ரிக் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

22.08.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 586 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. டயலொக் அக்ஸியாடா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   

23.08.2019  

சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டல்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு மறை பெறுமதியைப் பதிவு செய்திருந்தது. S&P SL20 சுட்டி, நேர் பெறுமதியைப் பதிவு செய்திருந்தது. புரள்வு ரூ. 280 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஹேலீஸ் ஃபப்ரிக் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு, மட்டுப்படுத்தப்பட்டளவில் பதிவாகியிருந்தது.  

வாரத்தில் அபவிசு 0.07% உயர்வையும் S&P SL20 0.10% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 509 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .