2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஹோட்டல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து ஹோட்டல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவற்றின் உரிமையாளர்களும், ஊழியர்களும் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஹோட்டல்கள் சம்மேளனம் (THASL) அறிவித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் மாநாடொன்றை Counter Terrorism Security for Hotels எனும் தலைப்பில் அண்மையில், கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில், 150க்கும் அதிகமான துறைசார் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்ததுடன், இவர்களை வரவேற்று இலங்கை ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் சனத் உக்வத்த உரையாற்றும் போது, “ஹோட்டல்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு நடைமுறைகைள உறுதி செய்து, ஊழியர்களுக்கு பாதுகாப்பு விடயங்களை மேற்கொள்ளும் பயிற்சிகளை வழங்கி, அதனூடாக ஹோட்டலின் ஊழியர்கள், விருந்தினர்கள், சொத்துகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூர், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் தொடர்பான பேராசிரியரான கலாநிதி. ரோஹண குணரட்ன இந்நிகழ்வில் கலந்து கொண்டு, அனைவருக்கும் பயன்தரும் விளக்கங்களை வழங்கியிருந்தார். ஹோட்டல்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது, பாதுகாப்பு ஊழியர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. சகல ஊழியர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். விருந்தினர் ஒருவரின் சந்தேகத்துக்கிடமான செயற்பாட்டை சேவை வழங்கும் வெயிட்டர் ஒருவர் இனங்காணக்கூடிய நிலையில், பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். போன்ற விடயங்களை குணரட்ன குறிப்பிட்டார்.
கோல்ஃபேஸ் ஹோட்டல் குழுமத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருந்திக பெரேரா மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டலின் பாதுகாப்பு தலைமை அதிகாரி கிளிப்பர்ட் அமுனுகம ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

ஹோட்டல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வது தொடர்பாக இலங்கை ஹோட்டல்கள் சம்மேளனத்தால் (THASL) ஏற்பாடு செய்யப்படும் தொடர் அமர்வுகளில் முதல் அமர்வாக இது அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் மேலும் பல அமர்வுகளை ஏற்பாடு செய்ய இலங்கை ஹோட்டல்கள் சம்மேளனம் (THASL) திட்டமிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .