2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மன்னார் எரிபொருள் அகழ்வு பணிகள் 50வீதம் வெற்றி

A.P.Mathan   / 2013 மார்ச் 17 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வு நடவடிக்கைகள் 50 வீத வெற்றியை பதிவுசெய்துள்ளது. 

இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி வீதம் சிறப்பானதென்றும் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் தொடர்பான எதிர்கால நம்பிக்கையை இதன்மூலம் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் இதுவரையில் நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றில் இரண்டு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னாரில் எரிபொருள் அகழ்வுகளில் ஈடுபடும் கெய்ன் லங்கா நிறுவனத்தின் தொடர்பாடல் பிரதானி கலாநிதி சுனில் பாரதி கருத்து தெரிவிக்கையில், ஹைதரோகார்பன் வளமுள்ள நாடுகள் வரிசையில் இலங்கை முன்செல்ல பல்வேறு வழிகள் உள்ளன. எமக்கு தேவையாயின் மூன்றாவது கட்ட அகழ்வுகளுக்கு செல்லும் வாய்ப்;புண்டு. அதன்மூலம் இன்னும் ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு அகழ்வு பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். இல்லாதபட்சத்தில் இதுவரையில் மேற்கொண்ட அகழ்வு பணிகளின் மதிப்பீடுகளை மேற்கொள்வதன்மூலம் அப்பகுதிகளில் இருக்கக்கூடிய எரிவாயுவின் அளவை கணிப்பிடலாம்.  தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள எரிவாயுவின் வர்த்தக பெறுமதி தொடர்பாக மதிப்பீடுகளை மேற்கொள்ள ஒராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். வர்த்தகரீதியான ஹைதரோகார்பன் உற்பத்தியை மேற்கொள்வதாயின் இன்னும் மூன்றாண்டுகள் தேவைப்படும் என குறிப்பிட்டார். 

இலங்கையில் மேற்கொள்ளும் அகழ்வு நடவடிக்கைகளுக்கு இணையாக கெய்ன் நிறுவனம் இந்தியாவின் ராஜஸ்தானிலும் ஹைதரோகார்பன் உற்பத்திகளை மேற்கொள்கின்றது. கெய்ன் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் எரிவாயு உற்பத்தி மின்சக்தி துறைக்கே பயன்படுகின்றது. ராஜஸ்தானில் ஹைதரோகார்பன் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் நாளாந்தம் ஒரு மில்லியன் கனமீற்றர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .