2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

எனர்பக் 2012ஆம் ஆண்டுக்கான விற்பனை வளர்ச்சியில் பிராந்திய முன்னோடியாக UTE கௌரவிப்பு

A.P.Mathan   / 2013 மார்ச் 01 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எனர்பக் ஹைட்ரோலிக் உபகரணங்களை இலங்கையில் விநியோகிக்கும் யுனைட்டட் ட்ராக்டர்ஸ் அன்ட் எக்கியுப்மன்ட்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டில் சிறந்த விற்பனை வளர்ச்சி பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தமைக்காக பிராந்தியத்தின் சிறந்த முன்னோடியாக எனர்பக் மூலம் கௌரவிக்கப்பட்டிருந்தது.

எனர்பக் ஹைட்ரோலிக் இந்தியா பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டி.சத்யடி இந்த கௌரவ விருதை யுனைட்டட் ட்ராக்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிரியாத் பெர்னான்டோவுக்கு கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தின்போது கையளித்திருந்தார். யுனைட்டட் ட்ராக்டர்ஸ் நிறுவனம், இலங்கையில் எனர்பக் ஹைட்ரோலிக் உபகரணங்களின் ஏக விநியோகத்தராக கடந்த இரு தசாப்த காலமாக செயலாற்றி வருகிறது. மூலப்பொருட்களை கையாளும் பிரிவின் மூலம் ஹைட்ரோலிக் உபகரணங்கள் சந்தைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பிரிவானது பிரதானமாக பராமரிப்பு மற்றும் கப்பல் கட்டுமான துறைகளுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த பொருட்களில் ஹைட்ரோலிக் சிலிண்டர்கள், உயர்த்தும் பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள், பம்ப் வகைகள் மற்றும் வால்வுகள், ஹைட்ரோலிக் அழுத்திகள், கட்டமைப்பு பாகங்கள், விசேடத்துவமான உபகரணங்கள் போன்றன உள்ளடங்குகின்றன.

1959ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட எனர்பக் ஐஎன்சி நிறுவனம், அமெரிக்காவின், விஸ்கொன்சினை தளமாக கொண்டு இயங்குகிறது. அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் வகையில் அவசியமான ஹைட்ரோலிக் சார் உயர் தரமான உபகரணங்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், பல்வேறு துறைகளுக்கு ஹைட்ரோலிக் சார்ந்த உபகரணங்களை விநியோகிக்கின்றமைக்காக இந்நிறுவனம் புகழ்பெற்றுள்ளது.

இந்த கௌரவிப்பு குறித்து யுனைட்டட் ட்ராக்டர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாத் இஸ்மைல் கருத்து வெளியிடுகையில், 'ஆசிய பிராந்தியத்தில் ஏனைய விநியோக நிறுவனங்களின் மத்தியில், எம்மை சிறந்த விநியோகத்தராக தெரிவு செய்து கௌரவித்துள்ளமையையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். வர்த்தக மற்றும் தொழில்துறைசார் வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் பல சிக்கனமான தீர்வுகளுக்கு சான்று பகர்வதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. அனைத்துவிதமான உயர்த்தல், தள்ளல், இழுத்தல், வளைத்தல் அல்லது பற்றிப்பிடித்தல் போன்ற அனைத்து விதமான தேவைகளுக்கும் எம்மிடம் தீர்வுள்ளது. எனர்பக் மற்றும் யுனைட்டட் ட்ராக்டர்ஸ் இணைந்து இந்த சேவைகளை வழங்கி வருகிறது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .