2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஜப்பானிடம் 600 மில். அமெ. டொ. கடனாக கோருகிறது இலங்கை

A.P.Mathan   / 2013 ஜூன் 10 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

600 மெகா வாற் நிலக்கரி மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதற்கு ஜப்பானிடம் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மின்சார உற்பத்தி செலவை குறைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமென இலங்கை வலு அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்டோ தெரிவித்தார். 
 
சூழலுக்கு பாதுகாப்பான முறையில் புகை கசிவு மற்றும் இரைச்சல் அற்ற விதத்தில் அமைந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து தாம் கவனம் செலுத்துவதாகவும், ஜப்பானின் JICA உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கான மொத்த செலவீனம் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 40 வருட காலப்பகுதியில் மீள செலுத்தப்படக்கூடிய வகையிலான கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டம் குறித்து ஆராய்வதற்காக ஜப்பானிய விசேட குழு இரண்டு வார காலப்பகுதியினுள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .