Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT மொபிடெல் நிறுவனத்தின் 2016 ஆண்டுக்கான “Cash Bonanza” சீட்டிழுப்புதிட்டத்தின் மூலம் மாதாந்த மற்றும் நாளாந்த அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்து இலட்சக்கணக்கான பரிசுகளை வழங்கப்பட்டுவருகின்றது.இம்முறை மாதாந்த சீட்டிழுப்பின் வெற்றியாளராக எப்பாவலை பிரதேசத்தைச் சேர்ந்த எச்.ஜே.எஸ் செனவிரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் கடந்த காலங்களில் அம்பலங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, ஷானிகா ஸ்ரீமாலி, வாரியபொலவைச் சேர்ந்த, ஜே.எம்.துஷாந்த ஜயலத், படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரோஷான பிரியதர்ஷன மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி. ஆர்.எம்.பீ.பி.பி. குமாரி தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த திருமதி பீ. ஏ. குசுமாவதி பதவிய ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.டி நிமால் ஜயசிங்க மற்றும் களுத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த விஜித் ரோட்ரிகோ ஆகியோர் கடந்த சீட்டிழுப்பில் மொன்டெரோ ரக கார்களை வெற்றி பெற்றிருந்தனர்.
இம்முறை “Cash Bonanza” களியாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவும் கட்டுநாயக்க அவரியவத்தை சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் இடம்பெற்ற இசைநிகழ்வின் பிரபல இசைக்குழுவான “Line One” இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்ததுடன் இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாபெரும் சீட்டிழுப்பின் வெற்றியாளரான எச்.ஜே.எஸ் செனவிரத்ன, மிட்சுபிசி மொன்டெரோ SUV ரக மோட்டார் வாகனத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் அஞ்சலோ மெத்யுஸிடமிருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016ஆம் ஆண்டில் மேலும் 4 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வினையொட்டி அன்றைய தினம் வருகை தந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் அன்றைய தினம் பல்வேறு களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கான Game Zone மொபிடெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அனுபவிப்பதற்கான மொபிடெல் சேவை மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இது வரை 8 வெற்றியாளர்கள் மொன்டெரோ ரக வாகனத்தினை பரிசாக பெற்றுள்ளதுடன் “Cash Bonanza” 2016 பரிசளிப்புத் திட்டத்தின் மூலம் இதுவரை 2335 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பணப்பரிசுசுள் 451,408 மொபிடெல் வாடிக்கையாளர்களிடையே பகிர்தளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025