2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

'Sayerlack'ற்கான விருதை வென்ற JAT ஹோல்டிங்ஸ்

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

SAYERLACK Waterbase மரப்பூச்சு வகைகளை இலங்கையில் சந்தைப்படுத்துவதில் புகழ்பெற்ற JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம், இலங்கையில் மரத்தளபாடங்கள் மற்றும் மரவேலை மேற்பூச்சு வகைகளை விநியோகிப்பதில் இணையற்ற முன்னோடியாக திகழ்கின்றது. இந்த உயர்ந்த நிலையை கௌரவிக்கும் வகையில், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் 14ஆவது ஆண்டாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் முன்னெடுத்திருந்த SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கல் நிகழ்வில் JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 'Sayerlack' நாமத்துக்கு ஆண்டின் சிறந்த B2B வர்த்தக நாமத்துக்குரிய வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

சந்தைப்படுத்தல் சிறப்புகளை SLIM ஊக்குவித்து வருவதுடன், நாட்டில் சந்தைப்படுத்தல் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறந்த சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை கௌரவிக்கும் நடவடிக்கைகளை இந்த விருதுகள் மேற்கொள்வதுடன், வர்த்தக நாம பிரச்சாரங்களின் போது பின்பற்றப்படும் சிறந்த செயற்பாடுகளை மேலும் ஊக்குவித்து, உள்நாட்டு வர்த்தக நாமங்களை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல ஊக்குவிக்கிறது.

1954 முதல், இத்தாலியின் 'Sayerlack' நாமம் புத்தாக்கமான மற்றும் உயர் தரம் வாய்ந்த மரப்பூச்சு வகைகளை விநியோகித்து வருகிறது. ஆய்வுகள், புதிய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வது, தயாரிப்புகள் இயலுமைகளை மேம்படுத்துவது போன்றவற்றின் மூலமாக, ஐரோப்பாவில் சிறந்த மற்றும் மாபெரும் மரவேலை மேற்பூச்சுகள் உற்பத்தியாளராக Sayerlack திகழ்கின்றது. இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள், இந்தியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூலமாக பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.

JAT ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏலியன் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையில் தயாரிப்புகளை சந்தைப்படுத்துகின்றமைக்காக எமது வர்த்தக நாமத்தின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள கௌரவிப்பையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். அர்ப்பணிப்பான ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் ஆகியோர் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் பங்களிப்பு ஆகியவற்றுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இவர்களின் பங்களிப்பின்றி, இந்த எதுவும் சாத்தியமடைந்திருக்காது' என்றார்.

நாட்டில் காணப்படும் சிறந்த பத்து 'உறுதியான பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தக நாமங்களில் ஒன்று' என அண்மையில் பிரான்ட்ஸ் ஃபினான்ஸ் லங்காவின் கௌரவிப்பை JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. சில மாதங்களின் பின்னர், SLIM தேசிய விற்பனை காங்கிரஸ் (NASCO) விருதுகள் 2015 இல், JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம் இரு தங்க விருதுகளை சுவீகரித்திருந்ததுடன், வெள்ளி மற்றும் வெண்கல விருதையும் சுவீகரித்திருந்தது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான செயற்பாடுகளின் போது, சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளதுடன், இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம், புகழ்பெற்ற தனது தெரிவுகளில், இத்தாலியின் SAYERLACK மரப்பூச்சு வகைகள், அமெரிக்காவின் ஹேர்மன் மில்லர் தளபாடங்கள், பிரித்தானியாவின் க்ரவுண் மற்றும் பேர்மோகிளேஸ் அலங்கார உள்ளக மற்றும் வெளிப்புற சுவர் பூச்சுகள், இத்தாலியின் Borma Wachs பராமரிப்பு தீர்வுகள் பிரான்ஸ் நாட்டின் Norton Abrasives (Saint Gobain) மற்றும் பிரஷ் மாஸ்டர் பிரஷ் வகைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. குழுநிலைச் செயற்பாடு மற்றும் கூட்டாண்மை குடியுரிமை ஆகியவற்றில் கம்பனி அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. இதற்கமைய தனது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், தனது தொழில்நுட்பவியலாளர்களுக்கு சர்வதேச பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X