2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

4rEver அறிமுகம் செய்யும் பருக்களுக்கான பரிபூரண தீர்வு

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகப்பருக்களுக்கு பரிபூரண தீர்வாக ''Lunuwila Anti-Acne Treatment''ஐ 4rEver skin naturals அறிமுகம் செய்துள்ளது. பல காலமாக மேற்கொண்டிருந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின் மூலமாக இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. இயற்கையின் அன்பளிப்பாக, நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு, முகப்பருக்களுக்கு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.

பெருமைக்குரிய இலங்கை நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முகப்பருக்களுக்கான சிறந்த தீர்வாக இந்தத் தயாரிப்பு அமைந்துள்ளது. இத்தயாரிப்பின் வணிக ரீதியான உற்பத்தி 2015 ஜுலை 21ஆம் திகதி நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருமதி. சாந்தனி பண்டார மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த அபேரட்ன ஆகியோரினால் கண்டியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிமுக நிகழ்வில், இந்த தயாரிப்பின் முக்கியத்துவம் பற்றி தலைமை அதிகாரி வலியுருத்தியிருந்ததுடன், நீண்ட காலமாக பருக்களை குணப்படுத்த சந்தையில் நிலவிய தேவை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரதம நிறைவேற்று அதிகாரி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், Lunuwila Anti-Acne treatment மூலமாக எவ்வாறு பரிபூரண தீர்வு வழங்கப்படுகிறது என்பது குறித்த விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், இந்தத் தயாரிப்பு பருக்களை குணப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், சருமத்தின் சிக்கல் தன்மையை சீராக்கி மேம்படுத்தக்கூடிய இயல்புகளை கொண்டுள்ளதாகவும், சருமம் தளர்வடைதலை தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளது பற்றியும் விளக்கியிருந்தார். சகல சேர்மானங்களும், ஆய்வுகூட பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தயாரிப்பு கால அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தயாரிப்பு பருக்கள் மறைந்த பின்னர் தோன்றும் சிவப்பு வடுக்களை தவிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

பருக்கள் என்பது, சருமத்தில் பொதுவாக தோன்றும் பிரச்சினையாகும், குறிப்பாக இளைஞர் யுவதிகள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தும் நிலையாகும். ஹோமோன்கள் மாற்றம் காரணமாக இவை பெரிதும் தோன்றுகின்றன. (பெண்களில் பூப்படைதல் காலப்பகுதியில், மாதவிடாய் ஏற்படும் முன்னர் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட முன்னர் தோன்றுகின்றன). அளவுக்கதிகமான எண்ணெய் சுரப்பு மற்றும் சருமத்தின் கீழ் பகுதியில் கலங்கள் அளவுக்கதிகமாக தோன்றல் காரணமாக ஏற்படுகின்றன. இவை இணைந்து, உயிரியல் ரீதியால் நெரிசல் ஒன்றை தோற்றுவித்து, சருமத்தின் மேற்பகுதியில் புடைத்து வெளிப்படுவதால் பருக்கள் தோன்றுகின்றன என சருமவியல் தொடர்பான அமெரிக்க அக்கடமி அறிவித்துள்ளது.  

எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பகட்ட பொருட்கள் வழங்கல் மூலமாக பெருமளவு நேர்த்தியான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். விளம்பர பிரச்சார செயற்பாடுகளை முன்னெடுக்கும் முதலில், வாய்மூல அறிவித்தல்களினூடாக நாம் பெருமளவு உற்பத்திகளை விற்பனை செய்துள்ளோம். இந்த தயாரிப்பின் சிறப்புக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X