2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பேணுங்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு நபரின் வாழ்விலும் மிகச்சிறந்த காலம் பிள்ளைப்பருவமாகும். பிள்ளையொன்றை மிகச்சிறந்த நபராக வளர்ப்பதுக்கு பிள்ளைப்பருவம் சிறந்த காலமாகும். இக்காலத்தில் பிள்ளைகளுக்கு உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாப்பு தேவைப்படுவதைப்போன்றே உங்களது பிள்ளையின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

எனவே உங்களது பிள்ளைக்கு சிறந்த நிதியியல் சூழலை உருவாக்குவதற்கு சரியான நிதியியல் பங்காளரை நீங்கள் தீர்மானியுங்கள். 77 வருடங்களுக்கு மேல் இலங்கை வங்கி தேசத்துக்கு அர்ப்பணிப்புச் செய்த சேவையானது இவ் வருடங்கள் பூராகவும் நாட்டின் முதற் தர வங்கி என சாதனை படைத்துள்ளது.  

எங்களது பிள்ளைகளின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை வங்கி பல வங்கியியல் ஆக்கங்களையும் சேவைகளையும் வழங்கியுள்ளது. இலங்கை வங்கியின் ரண் கெகுளு சிறுவர் சேமிப்புக் கணக்கு பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக பிள்ளைகளை மையமாகக் கொண்டுள்ளது. எத்தகைய இடருமின்றி செயற்படுத்தக்கூடிய ரண் கெகுளு சிறுவர் சேமிப்புக் கணக்கு பரவலாக நிதியியல் மற்றும் நிதியியல் அல்லாத அனுகூலங்களை வழங்குகின்றது.

இக்கணக்குக்கு 1% மேலதிக வட்டி வழங்கப்படுவதுடன் 10 பாரிமான நோய்களுக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவக் காப்புறுதி ரூ.100,000 வரை வழங்கப்படுகின்றது. மேலும் கணக்கைத் திறக்கும் வைப்புச் செய்பவருக்கு ஆகக்கூடியது ரூ.500,000 வரை காப்புறுதிக் காப்பளிப்பு வழங்கப்படுகின்றது. வைப்புச் செய்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பராமரிப்பவராயின் கணக்கில் காணப்படும் நிலுவைக்கமைய ஆகக்கூடியது 1 மில்லியன் ரூபாய் வரை காப்பளிப்புக்கு தகைமை பெறுவர்.

மேலும் ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடையும் ரண் கெகுளு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருடாந்தம் தலா ரூ.15,000, பெறுமதியான 2,000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இங்கு குறிப்பிட்ட பெரும்பாலான அனுகூலங்களை பெறுவதற்கு ரண் கெகுளு கணக்கொன்றில் ஆகக்குறைந்த நிலுவை ரூ.5,000ஐ பராமரித்திருக்க வேண்டும்.  

விற்பனைகள் மற்றும் நெறிப்படுத்தல் பிரதிப்பொது முகாமையாளர் குறிப்பிடுகையில் ‘இலங்கை வங்கியின் ‘பவர் பிளஸ்’ புத்தம்புதிய சிறுவர் முதலீட்டுத் திட்டமானது வங்கியின் 77ஆவது ஆண்டு நிறைவின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டது. இது வளரும் பிள்ளைகளுக்கு நிதியியல் பாதுகாப்புக்கான சக்தியை வழங்குவதுடன். அரசாங்கத்துக்கு சொந்தமான வங்கி பல வருடங்கள் கட்டியெழுப்பிய உறுதியுடன் உங்களது பிள்ளைக்கு இலாபகரமான நீண்டகால முதலீட்டுக்கு விஷேடமாக நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்துக்கு பாதுகாப்பை வழங்குகின்றது.

இத்திட்டத்தின் நிகரற்ற தன்மையாவது பெற்றோர் இறுதி நிலுவையை அறியாது விட்டு விட்டுச் சேமிப்பதை விட விஷேடமாக இலக்கு வைத்த சரியானதொரு தொகை நிலுவையை பொற்றோரால் அறிந்து கொள்ள முடிகின்றது’ எனக் குறிப்பிட்டார். புதிய முதலீட்டுத் திட்டம் 1 வயது தொடக்கம் 17 வயது வரையான பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்றது. முதிர்வின் போது முதலீட்டுக்காலத்துக்கு ஆண்டுக்கு 8% வருவாய் வழங்கப்படுவதுடன் ரூ.500,000 தொடக்கம் ரூ. 1 மில்லியன், ரூ. 2 மில்லியன் மற்றும் ரூ. 5 மில்லியன் வரை நான்கு வகையான முதலீட்டுத்திட்டங்களைக் கொண்டுள்ளது.

இந்நன்மையைப் பெறுவதற்கு பிள்ளைக்கு 18 வயதாகும் வரை கணக்கைப் பராமரிக்க வேண்டும். 1 வயது தொடக்கம் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு முதலீட்டுக் கால எல்லையும் மாதாந்த தவணையும் வயதுக்கேற்ப மாற்றமாடைகின்றது. எவ்வாறாயினும் இம்முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளால் ஆகக்குறைந்த முதலீட்டுக்காலம் 03 வருடங்களை பூர்த்திசெய்ய முடியாததால் அவர்கள் இம்முதலீட்டு வாய்ப்பை இழக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X