2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

3 உலக வர்த்தக மையத்தில்Royal Cashews விற்பனையகம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 16 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோயல் ஃபுட் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது 15ஆவது விற்பனையகத்தை கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்நிகழ்வில், நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி. ருவன் வதுகல பங்கேற்றிருந்தார். ரோயல் ஃபுட் மார்கெட்டிங் நிறுவனம், இலங்கையில் கஜு பதப்படுத்தல் நிறுவனமாக இயங்கி வருவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளின் தேவையை நிவர்த்தி செய்துள்ளது.  

நாடு முழுவதிலும், வெவ்வேறு பிரதான நகரங்களில் தனது விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. நுகர்வோருக்கு அசல் சுவைக் கொண்ட கஜுக்களை விற்பனை செய்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நாவில் சுவையூறும் வெவ்வேறு சுவைகளில் கஜுக்களைத் தயாரித்து வழங்கி வரும் இந்நிறுவனம், நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி வருகிறது.  

உலக வர்த்தக மையத்தில் தனது புதிய விற்பனையகத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ள இந்நிறுவனம், கிரெஸ்கெட் (கொழும்பு 03), லிபர்டி பிளாஸா (கொழும்பு 03), மிதக்கும் சந்தை (புறக்கோட்டை), ஆர்கேட் இன்டிபென்டன்ஸ் ஸ்குவெயார், K-Zone (ஜா-எல மற்றும் மொரட்டுவ), கண்டி சிட்டி சென்ரர் (கண்டி), தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (வெலிப்பனை நிறுத்துமிடம்), காலி, கம்பஹா, பொரளை, கிரிபத்கொட மற்றும் நுகேகொட ஆகியப் பகுதிகளில் அமைந்துள்ளன.  

ரோயல் ஃபுட் மார்க்கெட்டிங் தற்போது தனது Royal Cashews வலையமைப்பை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கம்பனி ISO 22000, HACCP P மற்றும் தர சான்றுகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனம் என்பதுடன், ISO 22000 தரச்சான்றையும் பெற்றுள்ளது.  

Royal Cashews தயாரிப்புகள் பரந்தளவு நாவூறும் சுவைகளில் காணப்படுகின்றன. 19 சுவைகளில், 682 வகை கொள்கலன்களில் சந்தைப்படுத்தப்படுவதுடன், இதில் 101 கொள்கலன்கள் அன்பளிப்பு செய்ய உகந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.  

இந்தத் தெரிவுகளுக்கு மேலதிகமாக, இலங்கைக்கு பிரத்தியேகமான கஜு கறியும் பேணியில் அடைக்கப்பட்டு “Royal Cashew Nut Curry” எனும் நாமத்தில் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .