2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

'செலான் டிக்கிரி' வெற்றியாளர்களின் Dream World கனவு பூர்த்தி

Gavitha   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது வாழ்வில் என்றும் மறக்க முடியாத தாய்லாந்து நாட்டுக்கான Dream World பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தரம் 5 புலமைப்பரிசில்  வெற்றியாளர்களும் புத்தாக்க உண்டியல் போட்டி வெற்றியாளர்களும் மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர். சிறுவர் சேமிப்புக்கணக்கான 'செலான் டிக்கிரி' மூலம் சிறுவர்களும் அவர்களின் பெற்றோரும் இந்த அரிய வாய்ப்பை பெற்றதோடு செலான் வங்கி இதற்கான அனைத்து செலவினங்களையும் பொறுப்பேற்றது.

இவ்விசேட தாய்லாந்து பயணத்திற்கு புத்தாக்க உண்டியல் போட்டியில் சிறந்தப் புத்தாக்க உண்டியலை உருவாக்கிய அனுராதபுர ஸ்வர்ணபாளி பெண்கள் பாடசாலையை சேர்ந்த A.D.ரத்னாயக்க மற்றும் குறித்த காலத்தில் உண்டியலில் அதிக பணம் சேர்த்த கடுனேரிய கிளையை சேர்ந்த ஆகாஷ் பெர்னாண்டோ ஆகியோருடன் தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளர்களான கேகாலை, உஸ்ஸபிடிய ஸ்ரீ சுமங்கல கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மெலனி விஜேசிங்க, கண்டி, கம்பொல கங்கசிரிபுர வித்தியாலயத்தை சேர்ந்த W.E.சச்சினி கவிந்திர உனண்தென்னே மற்றும் கேகாலை, மல்மடுவ மாகுர ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த ரவிந்து வனிகசேகர ஆகியோர் செலான் டிக்கிரி மூலம் Dream  World செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

இந்த Dream World பயணத்தில் பங்குபற்றி மீண்டும் நாடு திரும்பிய தரம் 5 புலமைப்பரிசில் வெற்றியாளரான மெலனி விஜேசிங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 'தாய்லாந்திலுள்ள Dream  Worldக்கு செல்லக் கிடைத்தமை குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த சந்தர்ப்பம் கிடைத்த நான், உண்மையில் அதிர்ஷ்டசாலி தான். இதற்கு முன் இவ்வாறான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்ததில்லை. எமக்கு தேவையான அனைத்தையும் செலான் வங்கி பெற்றுக் கொடுத்தது. மீண்டும் Dream  World செல்லக் கிடைத்தால் நிச்சயம் நான் போவேன். இவ்வாறான மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தமைக்கு செலான் வங்கியில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X